Ad Code

Responsive Advertisement

மாணவர் மருத்துவ முகாம்4 மாவட்டங்களில் துவக்கம்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், நேற்று துவங்கியது; 20 நடமாடும் மருத்துவ குழுக்கள், இந்த பணியில் ஈடுபட்டு உள்ளன.மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், நேற்று, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 



மழை பாதிப்பால், மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்பதால், பொது சுகாதாரத் துறை, பள்ளிகளில் சிறப்பு முகாம்களை துவக்கி உள்ளது. 20 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளன. 'தினமும், 40 பள்ளிகளில் முகாம் நடத்தப்படும். மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, தரமான குடிநீர் தரப்படுகிறதா, பள்ளி வளாகம் சுத்தமாக உள்ளதா என, இக்குழு ஆய்வு செய்யும். காய்ச்சிய குடிநீர் பருகுதல், சுற்றுப்புற துாய்மை குறித்து, மாணவர்களுக்கு ஆலோசனை தரப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement