Ad Code

Responsive Advertisement

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

மிலாடி நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி பணிகளை முன் கூட்டியே முடிக்க வேண்டிய நிலை, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

டிச., 23ல், மிலாடி நபி; 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருகின்றன. 26ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறை; 27ல், ஞாயிறு விடுமுறை என, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 23ல் அறிவிக்கப்பட்ட மிலாடி நபி, 24க்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், 24 முதல், 27 வரை, 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

இதுகுறித்து, கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'மிலாடி நபி விடுமுறை, டிச., 23' என, வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இதுவரை மாற்றம் இல்லை. அதனால், 24ல், வங்கிகள் இயங்கும். 25 முதல் 27 வரை விடுமுறை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement