Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு, 2,400; 10ம் வகுப்புக்கு, 3,500 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பள்ளிகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.பிளஸ் 2 தேர்வில், தனித்தேர்வர்கள் உட்பட, 8.5 லட்சம்பேர்; 10ம் வகுப்பு தேர்வில், 10.5 லட்சம் பேர் பங்கேற்கலாம் என தெரிகிறது. இதேபோல், வினாத்தாள் தயாரிப்பு, பார் கோடுடன் கூடிய விடைத்தாள் மற்றும் முகப்பு சீட்டு தயாரிப்பு போன்ற பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை வெள்ளத்தால், நடப்பாண்டு, அரையாண்டு தேர்வு நடப்பதில் சிக்கல் உள்ளது. ஆனாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பாடங்கள் நடத்தி முடித்துவிட்டனர். அதனால், முன்கூட்டியேதேர்வு நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; எனினும்,அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement