Ad Code

Responsive Advertisement

தமிழ்நாடு மின் வாரியத்தில் 1650 பணியிடங்கள்

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர்,உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது.

         

புதிய ஊழியர்களை, அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
           

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, ஊழியர் நியமனம் முறைகேடு இல்லாமல், வெளிப்படையாக நடத்தப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தி,புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்.அதில், தேர்வு நடைமுறை குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். வேலைக்காக, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement