Ad Code

Responsive Advertisement

அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சான்றிதழ் நகல்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாமை டிச.14-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்துகிறது. மாணவர்கள் தங்களிடம் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றதற்கான சான்றுகளான மாணவர் சேர்க்கை எண் அல்லது சேர்க்கை அடையாள அட்டை அல்லது தேர்வு பதிவு எண் அல்லது தேர்வு அனுமதி சீட்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாளத்துடன் விண்ணப்பித்து எவ்வித கட்டணமின்றி மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்புஃ கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement