வெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
"தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப் பாதிப்பை கருத்தில் கொண்டு டிசம்பர் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை