Ad Code

Responsive Advertisement

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 10 நாட்களுக்குள் நிவாரண தொகை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 10 நாட்களுக்குள், வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னை மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். 


கடந்த எட்டு நாட்களுக்கு முன், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய எண்களை பிரத்யோக விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்து, அந்த குடும்ப உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று வருகின்றனர்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அரசின், 'லினக்ஸ்' மென்பொருளில், பதிவு செய்வதற்காக தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் துறை எழுத்தர், 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்'களால் கணிப்பொறியில் பூர்த்தி செய்யப்படுகிறது. முதல் மூன்று நாள் சென்னை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும், 250 ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்கள், ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு, 300 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.



விரைவாக நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக, நான்காவது நாளிலிருந்து, பிற மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள், 130 பேர் சென்னை வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரவு பணி வழங்கப்பட்டு உள்ளது. ஊழியர் ஒருவர் தினமும், 200 விண்ணப்பங்களை பதிவு செய்யவேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுவரை, 9.85 லட்சம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. விண்ணப்பங்களை மென்பொருளில் பதிவு செய்யும் பணியை, மேலும் விரைவு படுத்த, 500 கல்லுாரி மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும், ௧0 நாட்களுக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்குகளில் வெள்ள நிவாரண தொகை கிடைத்து விடும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement