Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு பெயர் பட்டியல்15ம் தேதி வரை அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கென வழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. 

அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement