Ad Code

Responsive Advertisement

இலவச பாடப்புத்தகம், சீருடை மீண்டும் வழங்க முதல்வர் உத்தரவு

'மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர், நேற்று வெளியிட்ட அறிக்கை:கன மழையால், சில பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் சேதமடைந்தது தெரிய வந்துள்ளது. எனவே, வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும், இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், இலவச சீருடை ஒன்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கன மழைக்கு பலர் ரேஷன் கார்டை இழந்து விட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு, நகல் அட்டைகளை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement