ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை, நவ.4: ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை