Ad Code

Responsive Advertisement

வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை

தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.


அவர்களின் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் நனைந்தும்சேதமாகி விட்டன.பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மீண்டும் இலவசமாக வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பட்டியலை விரைவில் சேகரிக்குமாறு, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுஉள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement