Ad Code

Responsive Advertisement

'டெங்கு' : ஆடாதொடை மணப்பாகு: இன்று முதல் வினியோகம்

'டெங்கு' காய்ச்சல் தடுப்புக்காக, 'ஆடாதொடை மணப்பாகு' இனிப்பு கஷாயம், தமிழக அரசு மருத்துவமனைகளில், இன்று முதல் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர் சங்கத் தலைவர் பிச்சையா குமார், செயலர் தமிழ்க்கனி ஆகியோர் நேற்று கூறியதாவது:

ரத்த தட்டணுக்கள் குறைவால் இறப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஆடாதொடை மணப்பாகு என்ற இனிப்பு கஷாயத்தை, அரசுக்கு பரிந்துரைத்தோம்; அதை, அரசு ஏற்றுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறுடன், ஆடாதொடை மணப்பாகு இனிப்பு கஷாயத்தையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், இது கிடைக்கும். ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து சாப்பிடலாம். ஏற்கனவே, பயன்பாட்டில் உள்ளது தான் இந்த கஷாயம்; சளி, இருமலுக்கு நல்ல மருந்து.

அரசு மருத்துவமனைகளில், ஆங்கில, சித்த மருந்துகளை இணைத்து தருவது போல், தனியார்மருத்துவமனைகளிலும்நடைமுறைப்படுத்தினால், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தலாம். சித்த மருத்துவத்தை, 'நம்பிக்கை இல்லாத, காலாவதியான மருத்துவ முறை' என, அலோபதி டாக்டர்கள் விமர்சிப்பதை கைவிட வேண்டும். 

'மூன்று நாட்களில் நோய் குணமாகும்' எனக்கூறி, போலி மருத்துவர்கள் பலர் மக்களை திசை திருப்புகின்றனர்; மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். போலி டாக்டர்களை தடுக்க, சித்தா டாக்டரை உள்ளடக்கி, வட்டார அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என, கோரியுள்ளோம். விரைவில், தமிழக அரசு இந்தக் குழுவை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement