Ad Code

Responsive Advertisement

திங்கள் - செவ்வாயில் கன மழை பெய்யும்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் புயலாக உருவெடுக்கலாம் என்றும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். 

முதல்வர் தொகுதியில் அமைச்சர்கள் ஆய்வு:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் மழைநீர் பாதிப்பை ஆய்வு செய்யும் பொருட்டு, அமைச்சர்கள் வேலுமணி, வளர்மதி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி: நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச்சென்ற 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேடர்பாளையம் போலீசாரின் உதவியுடன் பலியான பெண்களின் உடல்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. 

கடலில் வீணாக கலந்த 41 டி.எம்.சி. மழைநீர்: வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம், இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. கடந்த 9 ஆம் தேதி மட்டும், 40 டி.எம்.சி.தண்ணீர் வங்கக்கடலில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தில் பெய்துவரும் மழையில் சிக்கி இதுவரை 55 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று (12ம் தேதி) வரை கடலூர் மாவட்டத்தில் 7 பேர் உட்பட 48 பேர் பலியாகியிருந்ததை தொடர்ந்து, இன்று (13ம் தேதி) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 55 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு : சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதில் சிக்கி மரணமடைந்த 7 பேருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் திறப்பு: பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை கொட்டியுள்ளதால், வினாடிக்கு ஆயிரம் கனஅடி என்ற அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, குழி்த்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து, அங்கிருந்தும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement