Ad Code

Responsive Advertisement

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.14) வழக்கமான விடுமுறை நாள் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த மழை காரணமாக இந்த வாரத்தில் வேலை நாள்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சில தனியார் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.

 சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதியே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement