சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகள், கலெக்டர் கட்டுப்பாட்டு பகுதிகள் என, இரு விதமான எல்லைகள் உள்ளன.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் விடுமுறை அளித்தாலும், மாநகராட்சி அறிவிக்க மறுத்தால்விடுமுறை இல்லை.தென் சென்னையில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழையமகாபலிபுரம் சாலையில் உள்ள பல பகுதிகள், சென்னை மாநகராட்சி எல்லையில் இருக்கின்றன; ஆனால், மாவட்டம் என, வரும்போது, காஞ்சிபுரம்கலெக்டர் கட்டுப்பாட்டுக்கு போய் விடுகின்றன.
எனவே, இங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதிலும், நிர்வாக குழப்பம் உள்ளது.இதேபோல், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதிலும், பிரச்னைகள் ஏற்படுகின்றன.சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலை இணைப்பில் உள்ளன. விடுமுறை விஷயத்தில், சில கல்லுாரிகள், கலெக்டர் அறிவிப்பையும், மற்ற கல்லுாரிகள் பல்கலை அறிவிப்பையும் பின்பற்றுகின்றன. அதனால், பெற்றோரும், மாணவர்களும் குழப்பம் அடைகின்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர் சடகோபன் கூறும்போது, ''எல்லை பிரச்னைகள்தீர்க்கப்படாததால், மழைக்கால விடுமுறை அறிவிப்பு மட்டுமின்றி, வழக்கமான பணி நடைமுறையிலும் குளறுபடி ஏற்படுகிறது. இது பற்றி அரசோ, அதிகாரிகளோ கவலைப்படுவதில்லை; மக்கள் தான் அவதிப்படுகின்றனர்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை