Ad Code

Responsive Advertisement

ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை ஆரப்பாளையம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் தினகரன் (50). நகைத்தொழில் செய்து வருகிறார். இவரிடம், ஐராவதநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பால்சாமி (72) என்பவர், நகை செய்வதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். 

அப்போது, தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் பால்சாமியின் மருமகள் ஜெயந்தி மாலாவுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகவும் இதற்கு ரூ.9 லட்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதை நம்பிய பால்சாமி ரூ.9 லட்சத்தை தினகரனிடம் கொடுத்துள்ளார். ஆனால் தினகரன் உறுதி அளித்தபடி வேலை வாங்கித்தரவில்லையாம். பணத்தையும் திரும்பத் தராமல் இழுத்தடித்துள்ளார்.  இதுகுறித்து பால்சாமி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் தினகரன் மீது தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement