Ad Code

Responsive Advertisement

தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தமிழகத்தின் பல பகுதி களுக்கும், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு முன், சனி, ஞாயிறு என, இரு நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை; திங்கள் கிழமை பணி நாள்; செவ்வாய் கிழமை, தீபாவளி விடுமுறை என, உள்ளது. அதனால், வெளியூர் செல்வோர், திங்கள் கிழமை வேலை நாளுக்காக, சொந்த ஊர் செல்வதை தவிர்த்து, தாங்கள் வசிக்கும் ஊர்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, திங்கள் கிழமை ஒருநாள் மட்டும், 'ரிலிஜியஸ் லீவ்' எனப்படும், மதச்சார்பு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர் தரப்பில் கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந் தும், ஊருக்குச் செல்ல முடியாத தர்ம சங்கட மான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுத் துறை விதிகளின் படி, மதச்சார்பு விடுமுறையை அரசு அறிவித்தால், மாணவர்களுக்கு, நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement