Ad Code

Responsive Advertisement

வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு - அனைத்து ஆசிரியர்களும் 8.30மணிக்கு முன்னதாக பள்ளிக்கு செல்ல வேண்டும் - இணை இயக்குனர் உத்தரவு

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வந்தன. வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. 

அதே நேரத்தில் சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-11-2015 வேலூரில் நடைபெற்ற இணை இயக்குனர்( Hsc.JD)மீளாய்வு கூட்ட தகவல்:தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்: ந.க.எண்.28804/ஜே2/2015.  நாள்.17-11-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர்  செயல்முறைகள். ந.க.எண்.34764/எம்/இ1/2015, நாள்.15.11.2015 தொடர் மழை காரணமாக அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாமல் கடைபிடிக்குமாறும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  நாளை 19-11-2015 முற்பகல் 8.30மணிக்கு முன்னதாக அனைத்து  ஆசிரியர்களும் பள்ளிக்குச்சென்று வகுப்பறைகளை முழுவதும் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே வகுப்பறையில் மாணவர்களை அமர வைக்கப்பட வேண்டும். பள்ளியில் மாணவர் பாதுகாப்பிற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை எனில் உடனே தொடக்கக்கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடு செய்தல் வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement