மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஏற்கனவே கீழ்நிலை ஊழியர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.ஆனால் 7–வது சம்பள கமிஷனில் மேல்நிலை அதிகாரிகளுக்கு இப்போது அதிக சம்பள உயர்வுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. உச்ச நிலையில் உள்ள ஊழியர்களுக்கு 28 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் கீழ்நிலை ஊழியர்களுக்கு 17 சதவீதம் மட்டுமே கூடுதலாக அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.கேபினட் செயலாளர் ஒருவருக்கு தற்போது ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் சம்பளம் கிடைத்து வருகிறது. அவருக்கு ரூ.2½ லட்சம் சம்பளம் வழங்க சிபாரிசு செய்துள்ளனர். செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இது 28 சதவீதம் கூடுதலாகும்.கூடுதல் செயலாளராக இருக்கும் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் தற்போது வழங்கப்படுகிறது. அது ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.அதே நேரத்தில் கீழ்நிலையில் உள்ள ஊழியருக்கு ரூ.15 ஆயிரத்து 330 சம்பளம் வழங்கப்படுகிறது. அது 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 17.4 சதவீதம் மட்டுமே கூடுதலாக சம்பளம் கிடைக்கும். இதே போல கீழ்நிலை ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு அலவன்ஸ்சுகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு கீழ்நிலை ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை