அரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் 75சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சலுகையில் மேலும் 5 சதவீதம் அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் சந்தைப் பிரிவு MARKETING Wing) பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மாதந்தோறும் தங்களின் தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம்தள்ளுபடி பெற்று வந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்தச் சலுகை 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதேபோல், ஓராண்டுக்கான தொலைபேசி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும்பட்சத்தில், இரண்டு மாத வாடகைக் கட்டணத்தை தள்ளுபடியாகப் பெற்றும் வந்தனர். இந்த சலுகையும், அப்போது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.75 சதவீதம் அளவுக்கு சலுகைக் குறைப்பு: சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், தற்போது வழங்கப்படும் 10 சதவீத சலுகையில் 5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுப் பெற்ற அரசு ஊழியருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல், இந்தப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் இனி தங்களின் தொலைபேசிக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டுமே சலுகையாகப் பெற முடியும். இதுவரைஅரசு ஊழியர்கள் பெற்று வந்த சலுகையில் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இலவச அழைப்புச் சலுகையும் குறைப்பு: வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பி.எஸ்.என்.எல்.தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் (9 முதல் 7 மணி வரை) அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதிலும், அரசு ஊழியர்களுக்கு சில மாற்றங்களைக் கொண்டுள்ளது.
அதாவது, இனி வரும் நாள்களில் இரவு நேரத்தில் தரைவழித் தொலைபேசி வாயிலாக, பி.எஸ்.என்.எல். தொலைபேசி, செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டால் மட்டுமே இலவச அழைப்பாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், அதற்குரியக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை: கடந்த 2004-ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் ரூ.10,183 கோடியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2014-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ரூ.8,234 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
அதேபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்த நஷ்டத்தை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தச் சலுகைக் குறைப்பு இருக்கலாம் என்றனர் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை