Ad Code

Responsive Advertisement

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி'

உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம். 
இதுவரை, இந்த திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக, இந்தாண்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,
இந்தாண்டில், அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரித்துஉள்ளது.

இதுகுறித்து, உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, ஆண்டுக்கு, 20 நாட்கள் மட்டுமே, அரசு விடுமுறை தினமாக இருந்தது. சமாஜ்வாதி அரசு பதவியேற்றதும், பல்வேறு சமூகத்தினரின் ஓட்டு வங்கியை குறிவைத்து, அந்தந்த சமூகம் சார்ந்த தலைவர்களின் பிறந்த நாட்களை, அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. 
விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளதால், அரசு நிர்வாக பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 24 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement