Ad Code

Responsive Advertisement

குரூப்- 2 தேர்வு: இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப்- 2 தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படவுள்ளது.

இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள உள்ளோர், தேர்வு விண்ணப்பத்தின் நகல், கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களுடன், சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை, நவம்பர் 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement