Ad Code

Responsive Advertisement

'குரூப் - 2ஏ' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை

பருவ மழையால், மின்வெட்டு பிரச்னை மற்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, குரூப் - 2ஏ தேர்வுக்காக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அரசின் பல துறைகளில், குரூப் - 2ஏ பிரிவில் அடங்கிய பதவிகளில், காலியாக உள்ள, 1,947 இடங்களுக்கு பணி நியமன தேர்வு, ஜனவரி, 24ம் தேதி நடக்க உள்ளது. 

விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம், நவ., 18ம் தேதி முடிகிறது. ஆனால், 10 நாட்களாக மழை கொட்டுவதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் தேர்வு எழுத விரும்புவோர், மழை வெள்ளப் பாதிப்பால் மறு கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் மின் வினியோகம் மற்றும் இணைய செயல்பாடு பாதிப்பால், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியவில்லை. இ - சேவை மையங்களிலும் மின் வினியோக பாதிப்பு மற்றும் இணைய பிரச்னையால் நிரந்தரப்பதிவு செய்யவோ, விண்ணப்பிக்கவோ முடியவில்லை. எனவே, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க, டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement