மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை