Ad Code

Responsive Advertisement

"பிளஸ் 2 மாணவர்களுக்கு இரு மாதங்களுக்குள் மடிக்கணினிகள்'

நிகழாண்டில் (2015-16) பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் இரு மாதங்களில் வழங்கப்பட்டுவிடும் என கல்வித் துறை அதிகாரிகள் கூறினர். 

அரசு, அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படுகிறது. இதில், 2014-15ஆம் கல்வியாண்டு பயிலும் மாணவர்களுக்கான மடிக் கணினி விநியோகம் அண்மையில் நிறைவடைந்தது.

இதையடுத்து, நிகழாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 511 மாணவிகளுக்கு மடிக் கணினிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் வழங்கினர். 

விழாவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபிதா, சைதாப்பேட்டை எம்எல்ஏ ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். "மாணவர்களுக்கு இரண்டு மாதங்களில் மடிக் கணினிகள் முழுமையாக வழங்கப்படும். இதற்காக, 90 சதவீத மடிக் கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் விநியோகம் செய்யப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement