Ad Code

Responsive Advertisement

ரயில் பயணத்தில் பிரச்னையா இலவச எண் '182' இருக்கு!கமிஷனர் தகவல்

'ரயில்களில் பயணிக்கும்போது, பயணிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இலவச எண்ணான '182'ஐ அழைத்தால், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உதவுவார்கள்'' என அதன் கமிஷனர் சங்கர்குட்டி தெரிவித்தார்.தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு போன்ற வெடிபொருட்களை ரயில்களில் கொண்டு வரக்கூடாது என, மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிருபர்களிடம் சங்கர்குட்டி கூறியதாவது:தீபாவளியை முன்னிட்டு, சிவகாசியில் இருந்து அதிகளவு பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறது. அதை ரயில்களில் கொண்டு வர அனுமதியில்லை. இதை கண்காணிக்க, சிவகாசி, திருத்தங்கல், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை ரயில்வே ஸ்டேஷன்களில், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் மற்றும் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தடையை மீறி ரயில், ரயில்வே இடத்திற்கு கொண்டு வந்தால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164ன்படி, கைது செய்யப்படுவர். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். ரயில்கள் ஓடும்போது, கல்லெறி சம்பவங்கள் நடக்கின்றன. எந்த இடத்தில் சம்பவம் நடந்தது என்பதை கண்டறிந்து, அங்கு 'மப்டி'யில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். குற்றவாளியை நாங்கள் பிடிக்கும்பட்சத்தில், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கிறோம்.

ரயில்களில் பயணிக்கும் போது, பயணிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இலவச எண்ணான '182'ஐ அழைக்கலாம். உடனடியாக அருகில் உள்ள ஸ்டேஷனில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வந்து உதவுவார்கள், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement