தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு துறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர்களும், தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை “வெள்ள நிவாரண நிதி”யாக நவம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ள சம்மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார். அதேபோன்று அரசு அலுவலக ஒன்றியம் சார்பில் மாநில தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் ஜெயக்கொடி ஆகியோரும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மொத்தத்தில் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மேற்கண்ட 3 சங்கத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை