Ad Code

Responsive Advertisement

UGC விதியை மீறி Online Course அறிவிப்பு!

ஆன்லைன் படிப்புக்கு அனுமதியில்லை என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., எச்சரித்த நிலையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது. 

இந்தியாவில் பல பல்கலைகள், ஆன்லைன் மூலம் டிப்ளமோ, டிகிரி மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தி வந்தன. அதில், மாணவர்களுக்கு சரியாக பாடம் கற்று தருவதில்லை என புகார் எழுந்ததால், ஆன்லைன் படிப்புக்கு, அனுமதி தரப்படவில்லை. மீறி நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, யு.ஜி.சி., எச்சரித்தது. இதையடுத்து, அண்ணா பல்கலையில் அறிவிக்கப்பட்ட, எம்.எஸ்சி., படிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, ஏழு வார சான்றிதழ் படிப்பு நடத்தப்படும் என, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது. மொத்தம் ஐந்து பகுதிகள் கொண்ட ஏழு வார படிப்பில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருப்பமுள்ளோர்,http:/www.ncert.nic.in/departments/nie/der/index.html என்ற இணைப்பில், 10க்குள் பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படுவோர் பட்டியல், 18ம் தேதி அறிவிக்கப்படும். ஆன்லைன் படிப்பில் சேர்வோர், இன்டர்நெட் இணைப்பு கொண்ட கணினி வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement