Ad Code

Responsive Advertisement

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

''அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளுக்காக, ஏற்கனவே இரண்டு சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மூன்றாவது சிறப்பு முகாம், நடைபெற உள்ளது. 

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, 14ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போது, 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சிறப்பு முகாமிற்கு வர முடியாதவர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, ஆகியோரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement