Ad Code

Responsive Advertisement

சைக்கிளில் வரும் 'நீதிபதி'

ஆத்துார் விரைவு நீதிமன்ற, 'மாஜிஸ்திரேட்,' தினமும் பணிக்கு சைக்கிளில் வருவதோடு, பள்ளி மாணவர்களுக்கு, 'லிப்ட்' கொடுப்பது, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், சேலம் மாவட்டம், ஆத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றுகிறார். 

ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வாடகை வீட்டில், குடியிருக்கும் இவர், அங்கிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள நீதிமன்றத்துக்கு, தினமும் சைக்கிளில் வருகிறார்; சில நாட்களில், நடந்தும் வருகிறார்.

சைக்கிளில் செல்லும்போது, பள்ளி மாணவர்கள், 'லிப்ட்' கேட்டால் அவர்களை ஏற்றியும் செல்கிறார். எளிமையாக காணப்படும் இவர், பல நாட்களாக தேங்கிக் கிடந்த காசோலை வழக்குகளையும், விரைந்து தீர்த்து வைத்துள்ளதாக, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement