Ad Code

Responsive Advertisement

‘இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது’: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது என்று, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படப் போகிறது என்று சிலர் வதந்திகளைப் பரப்புவதாக குற்றம்சாட்டினார். 


தேர்தல் வரும்போதெல்லாம் இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யத் தொடங்குவதாக குறிப்பிட்ட மோடி, அதை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.நவம்பர் 26-ம் தேதியை அரசமைப்புச் சட்ட நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்த அவர், அந்த நாளில் அரசமைப்புச் சட்டம் குறித்தும், அம்பேத்கர் குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் என்று கூறினார்.இதனிடையே, மும்பை இந்து மில்ஸ் வளாகத்தில், சட்டமேதை அம்பேத்கருக்கு நினைவிடம் அமைப்பதற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.​

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement