ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க, அரசு ஊழியர்களின் பணி ஆவணங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின், பல்வேறு துறைகளில், 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், பணியாற்றுகின்றனர். இவர்கள், ஓய்வு பெறும் போது, அவர்களின் பணி ஆவணத்தில் ஏற்படும் குளறுபடியால், அவர்களுக்கு, ஓய்வூதிய பலன்கள் பெறுவதில், காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பணியாளர்களின் பணி ஆவணங்கள், ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படவேண்டும்.
ஆவணத்தில் ஏதாவது தவறு இருந்தால், அது பற்றி, சம்பந்தப்பட்ட ஊழியருக்கும், துறையின் தலைமைக்கும் தெரிவித்து தீர்வு காணப்பட வேண்டும். இதை, குறிப்பிட்ட காலவரைக்குள், செய்து முடிக்க வேண்டும். அப்போது தான், ஓய்வு பெறும் போது, அதன் பலன்களை பெறுவதில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு, எந்த தாமதமும் ஏற்படாது.
இவ்வாறு, உத்தரவில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், கூறியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை