சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மாணவர்களுக்கென விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணிகளுக்கு சென்னை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண் சமையலர் - 06
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.4800 - 10,000 + தர ஊதியமாக ரூ.1,300.
தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேலும், சைவ- அசைவ உணவு வகைகள் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:தகுதியுடைய முழுநேர சமையல் பணி புரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள், பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்ததேதி, அசல் முகவரி (அஞ்சல் குறியீடு அவசியம்), கல்வி தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் (ஆதரவற்ற விதவை - முன்னாள் இராணுவத்தினர் - மாற்றுதிறனாளிகள் - கலப்பு திருமணம்), வேலைவாய்ப்பு பதிவு விவரம் (இருப்பின்), குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று உள்ளிட்ட சான்றுகள் அவசியமானது.
இந்த பணிக்கான சான்றுகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், 2வது தளம், சிங்காரவேலர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை-1 என்ற முகவரியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அக்டோபர். 30 மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை