Ad Code

Responsive Advertisement

மருத்துவப் படிப்பில் சேர அவகாசம் முடிந்தது மீதமுள்ள 74 இடங்களை நிரப்புவதில் சிக்கல்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை காலம் முடிந்துள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைத்த, 77 இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஓமந்துாரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லுாரி உட்பட, 21 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.மொத்தமுள்ள, 2,655 இடங்களில், 15 சதவீதமான, 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்பட்டது. 2,257 மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள், மாநிலத்துக்கே திரும்பக் கிடைக்கும். அதையும் சேர்த்து, செப்., 30க்குள், இறுதிக் கலந்தாய்வு நடத்தப்படும்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள, எம்.பி.பி.எஸ்., - 67; பி.டி.எஸ்., - 7 என, 74 இடங்கள், நேற்று தான், திரும்பக் கிடைத்தன. ஆனால், மாணவர் சேர்க்கைக்கு, நேற்று தான் கடைசி நாள் என்பதால், இந்த இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''நேற்று மதியம் தான், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் திரும்ப கிடைத்தன. அரை நாளுக்குள் மாணவர்களை சேர்க்க சாத்தியமில்லை. அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement