Ad Code

Responsive Advertisement

வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை!

வங்கிகளுக்கு வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. ஆனாலும், அந்த நாட்களில் ஏ.டி.எம்., மையங்கள் முடங்காது' என, வங்கிகள் தெரிவித்துள்ளன.நடப்பு மாதமான அக்டோபரில், வங்கிகளுக்கு, 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. 


அக்., 2 - காந்தி ஜெயந்தி; 4- ஞாயிற்றுக்கிழமை; 10 - இரண்டாவது சனிக்கிழமை; 11, 18 - ஞாயிற்றுக்கிழமை; 21 - ஆயுத பூஜை; 22 - விஜயதசமி; 23- மொகரம்; 24 - நான்காவது சனிக்கிழமை; 25 - ஞாயிற்றுக்கிழமை.வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை. இதனால், நேரடி வங்கிப் பணிகள்முற்றிலும் முடங்கும்.ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் இணைய வங்கி சேவைகள் மட்டும் இயங்கும்.


அதிலும், ஏ.டி.எம்., இயந்திரத்தில் நிரப்பி வைக்கப்படும் பணம், ஐந்து நாட்களுக்கு தாக்குப் பிடிக்குமா என்றசந்தேகம் எழுந்துள்ளது.இணைய வங்கி சேவையில், பணப் பரிமாற்றம் செய்தாலும், வேலை நாட்களில் மட்டுமே, அவற்றுக்கான அனுமதி அளிக்கப்படும். தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால், இணையம் மூலம் நடக்கும், பண பரிமாற்றத்துக்கும் வங்கி அனுமதி உடனேகிடைக்காது. இதனால், இணைய பண பரிமாற்றம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.இதுகுறித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் வேலையை, தனியார் ஏஜன்சிகள் தான் செய்கின்றன. எனவே, தொடர் விடுமுறை என்றாலும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது.மேலும், சில வங்கிகளை தவிர, பெரும்பாலான வங்கிகளின் இணைய வழி கணக்குகளை, வாடிக்கையாளர்களே பராமரிக்கலாம். அதற்கு ஏற்றவாறு அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.


இணையம் மூலம் நடக்கும் பணபரிமாற்றத்தின் போது, வங்கிக்கு எஸ்.எம்.எஸ்., வரும். அதைக் கொண்டு, பண பரிமாற்றத்துக்கு தானாகவே அனுமதி கிடைத்து விடும்.எனவே, இந்த ஐந்து நாட்கள் விடுமுறை குறித்து வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காசோலைகள், வரைவோலைகள் தேக்கமடையும்; அதைதவிர்க்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement