Ad Code

Responsive Advertisement

ஒரு செல்போன் ‘2-டிஸ்ப்ளே’ எல்.ஜி நிறுவனம் அறிமுகம்

தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் ஒரே செல்போனில் இரு டிஸ்ப்ளே (திரை) உள்ள ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. ‘வி.10’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பிரதான டிஸ்ப்ளே 5.7 இன்ச் அளவு கொண்டது. 2-வது டிஸ்ப்ளே என்பது பிரதான டிஸ்ப்ளேக்கு மேல் பகுதியில் சிறிய அளவில் இருக்கும். 

இந்த டிஸ்ப்ளேயில் தேதி, நேரம், காலநிலை, பேட்டரி நிலை, எஸ்.எம்.எஸ்., மிஸ்டுகால் அலர்ட் ஆகியவை காண்பிக்கப்படும். பிரதான திரை ஆப் செய்யப்பட்டு இருக்கும் போது கூட இந்த சிறிய டிஸ்ப்ளேயில் அனைத்து தகவல்களும் தெரியும்.
         

மேலும், போனில் உள்ள ஆப்ஸ்களுக்கு உடனே செல்ல சிறிய திரை பயன்படும். முன்பகுதியில் இரு கேமிராக்கள் உள்ளன. ஒரு கேமிரா குறைவான தரத்தில் படம்,வீடியோ எடுக்கவும், மற்றொரு கேமிரா எச்.டி. தரத்தில் எடுக்கவும் பயன்படும். ஸ்டீல் கவருடன், பளபளக்கும் சிலிகான் கவருடன் வி10 செல்போன் சந்தையில் ரூ. 40 ஆயிரம் விலையில் சந்தையில் கிடைக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement