Ad Code

Responsive Advertisement

பட்டப்படிப்புக்கான கூடுதல் கால அவகாசம் 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை

பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறா விட்டால் வழங்கப்படும் கால நீட்டிப்பை 2 ஆண்டாக குறைக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங் களில், இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்களுக்கு குறிப்பிட்ட கல்வி ஆண்டுகள் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்துக்குள் முடிக்க முடியாதவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் உள்ளிட்ட இளநிலைப் பட்டங்களுக்கு 5 முதல் 8 ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு 4 முதல் 7 ஆண்டுகளும், முனைவர் பட்டத்துக்கு 7 முதல் 9 ஆண்டுகளும் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

இந்த அவகாசம் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களின் விருப் பத்துக்கு ஏற்ப சிறிது வேறுபடு கிறது. இந்த அவகாசத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் யுஜிசி புதிய பரிந்துரையை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பியுள்ளது.

அதில், ‘வழக்கமான கால அவகாசத்தில் தேர்ச்சி பெற இயலாதவர்களுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் மேலும் ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட லாம்.

ஆனால், 2 ஆண்டு கால நீட்டிப்பையும் தாண்டி கூடுதலாக மேலும் ஓராண்டு அவகாசம் பெற்ற மாணவ, மாணவியர் அப்பல்கலைக்கழகத்தின் தனித் தேர்வர்களாகவே கருதப்படுவர். அவர்கள் பல்கலைக்கழகத்தின் விருதுகளுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.

யுஜிசியின் பரிந்துரை, மத்திய பல்கலைக்கழகங்களில் உத்தர வாக ஏற்கப்பட்டு பின்பற்றப் படுகின்றன. ஆனால், மாநில பல்கலைக்கழகங்களில் அங்குள் கல்வி முறைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துவதால், அது வெறும் பரிந்துரையாக மட்டுமே பார்க்கப் படுகிறது. இருப்பினும் பெரும் பாலான மாநில பல்கலைக் கழகங்கள், யுஜிசி அளிக்கும் நிதி உதவிகளைப் பெறுவதால், அதன் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கின்றன. எனவே, பட்டப்படிப்புகள், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு அளிக்கப்படும் கூடுதல் கால அவகாசத்தை 2 ஆண்டுகளாக குறைக்கும் பரிந் துரையை பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் யுஜிசி அலுவலர்கள் கூறும்போது, “நாடு முழுவதும் கல்விமுறையை சீர்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. கூடுதல் அவகாசம் அளிப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement