காஞ்சிபுரம்: செய்யூரில், பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரால், பிளஸ் 2 மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகள் கவுசல்யா, 17. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் உள்ள, தன் பாட்டி வீட்டில் தங்கி, நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பயின்று வந்தார்.
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், அங்கு வந்த போலீசார், அவர்களுடன் பேச்சு நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவில்லை.தொடர்ந்து, பிற்பகல், 1:00 மணியளவில், மதுராந்தகம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன், கிராம வாசிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.போராட்டம் காரணமாக, மதுராந்தகம் சாலையில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக, நல்லூர் கூட்டுச்சாலையிலும், கிராம வாசிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாலியல் தொந்தரவு காரணமாக, மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கைது; 'சஸ்பெண்ட்'
மாணவி கவுசல்யா தற்கொலை தொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன் விசாரணை நடத்தினார்.போலீசாரும் விசாரணை நடத்தி, வடக்கு செய்யூரைச் சேர்ந்த, ஆசிரியர் ரமேஷை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், ரமேஷ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடிதத்தில் இருப்பது என்ன?
கவுசல்யா தற்கொலை தொடர்பாக, அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலை செய்து கொள்ளும் முன், கவுசல்யா அலை பேசியில் அழைப்பு வந்ததாகவும், அதனால், அவர் அழுதபடி இருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்ளும் முன், பள்ளி தலைமை ஆசிரியருக்கு கவுசல்யா எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், 'விலங்கியல் ஆசிரியரான ரமேஷ் கொடுத்த பாலியல் தொந்தரவால் தான், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' எனத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தை, போலீசாரிடம் அவரது உறவினர்கள்
ஒப்படைத்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை