Ad Code

Responsive Advertisement

அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அக்டோபர் 26-யிலிருந்து நவம்பர் 9-க்குள் www.alagappauniversity.ac.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விருதுநகர் அழகப்பா பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வாயிலாகவும் கட்டணத்தை செலுத்தி நுழைவுச்சீட்டை பெறலாம். செமஸ்டர் முறை தேர்வு எழுதுபவர்களும், தேர்வு எழுதி தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு அழகப்பா பல்கலை விருதுநகர் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனமுதன்மை நிர்வாகி காசிராமன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement