Ad Code

Responsive Advertisement

செல்வமகள் திட்டம்: டிசம்பர் 2-ந் தேதி வரை 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

உலக தபால் தினம் மற்றும் அஞ்சல் மன்றத்தின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை வெளியிடும் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில், தலைமை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சல் துறை தலைவர் (தபால் மற்றும் விற்பனை மேலாண்மை) வெங்கடேஷ்வரலு ஆகியோர் சிறப்பு தபால் உறை மற்றும் முத்திரையை வெளியிட அஞ்சல் மன்ற உறுப்பினர்கள் திருக்குறள் பாஸ்கரன், ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


விழா முடிவில் சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-இந்தியா முழுவதும் 6 ஆயிரம் தபால் நிலையங்கள் ‘கோர் பேங்கிங்’ முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 500 தபால் நிலையங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதே போன்று பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி, சுரக்ஷா ஆகிய இன்சூரன்ஸ் திட்டங்களில் தலா ஆயிரம் பாலிசிகள் பிடித்துள்ளோம்.இது தவிர செல்வ மகள் திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. செல்வ மகள் திட்டத்தில் வருகிற டிசம்பர் 12-ந் தேதி வரை, 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்வதற்கான சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.கடித போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஜனவரி மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு கண்காட்சி நடத்த உள்ளோம்.


இதில், தலை சிறந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கடிதங்கள் காட்சி பொருட்களாக வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.உலக தபால் தினத்தையொட்டி, சென்னை வேப்பேரி தபால் நிலையம் உள்பட பல்வேறு தபால் நிலையங்களில், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தபால் நிலைய அலுவல்களை நேரில் சென்று பார்வையிட்டனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement