Ad Code

Responsive Advertisement

வரும் 17ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்,  தண்டையார்பேட்டை எம்பிடி விளையாட்டு அரங்கில் நடத்துகின்றன. இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட  தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு,  ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது விவரங்களை (www.tnvelaivaaippu.gov.in) என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும்  விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement