Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு தேர்வு செய்முறைபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

'அடுத்த ஆண்டு மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சியில் சேர, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பாடங்களையும் எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள் மற்றும், 2012க்கு முந்தைய பாடத்திட்டத்தில், அறிவியல் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மீண்டும் தேர்வு எழுத, அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இதற்கான பயிற்சி வகுப்பில், பெயரை பதிவு செய்ய, ஜூன், 10 முதல் 30ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது; தற்போது, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஜூனில் பதிவு செய்யாதவர்களும், செப்., 4ல், எட்டாம் வகுப்பு தனித்தேர்வில், தேர்ச்சி பெற்றோரும் புதிதாக பதிவு செய்யலாம். செய்முறை பயிற்சியில், 80 சதவீதம் பங்கேற்பவர்கள் மட்டுமே, செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பங்கேற்காதவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

''விண்ணப்பங்களை, இம்மாதம் 8ம் தேதி முதல், www.tndge.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல் எடுத்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement