Ad Code

Responsive Advertisement

10 வயதில் முதுகலை பட்டம் ஆந்திர மாணவி சாதனை

ஆந்திராவைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, இந்தியில், முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.கிழக்கு கோதாவரி மாவட்டம், பொம்மூரைச் சேர்ந்த, மிருணாளி, சந்திரசேகர் ராவ் தம்பதியின் மகள், சாய் வைஷ்ணவி, 10. இவர், 7ம் வகுப்பு படித்து வருகிறார். 

இவரின் தந்தை, தோட்டக்கலைத் துறை அதிகாரியாகவும், தாய், கல்லுாரி விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றனர்.நான்காம் வகுப்பு முதல், இந்தி படிக்க துவங்கிய சாய் வைஷ்ணவி, இளங்கலை பட்டப்படிப்பை, சில மாதங்களுக்கு முன் முடித்து விட்டார். முதுகலை பட்டப்படிப்பிற்கு சமமான, படிப்புகளை, கடந்த ஆகஸ்ட்டில் முடித்தார். தன், 10 வயதிற்குள், இந்தியில், முதுகலை பட்டப் படிப்பை முடித்துள்ள அவரை, பள்ளி நிர்வாகம் பாராட்டியது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement