Ad Code

Responsive Advertisement

விடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.

இதன்படி, மூன்று கல்வி ஆண்டுகளில், 10ம் வகுப்பு அறிவியலில், 100க்கு, 100 எடுப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும், கல்வித்தரம் உயரவில்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே தேர்வு முறை, பாடத்திட்டம், விடைத்தாள் திருத்த முறையை மாற்ற, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதனால், இந்த ஆண்டு, அறிவியலில் சென்டம் எண்ணிக்கையை குறைக் கும் வகையில், கடினமான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்க, அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

அதற்கேற்ப, பள்ளி கல்வித்துறையும், அறிவியல் புத்தகத்தில் கூடுதல் கேள்விகளை இணைத்து உள்ளது. ஆனால், இந்தக் கேள்விகளுக்கு, பாடங்களில் விடைகள் இல்லாததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்களுக்கு சிக்கலான கேள்விகளை கொடுக்க, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து, வினாத்தாள் தயாரிப்பை மாற்ற வேண்டும். அதை விடுத்து, பாடங்களில் இல்லாத வினாக்களை மட்டும் கொடுத்துள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பத்துக்கு ஆளாகிஉள்ளனர். 

இந்த வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ள, மாணவர்கள், 'கெய்டு' வாங்கினால், அதிலும் சரியான விடை இல்லை. ஒவ்வொரு கெய்டிலும் ஒரு விடை கூறப்பட்டு உள்ளது. இதனால், புத்தகத்துக்கும், வினாக்களும் சம்பந்தமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி கல்வித்துறை, புத்தகங்களில் இல்லாத வினாக்களுக்கு, தனியாக, 'கீ ஆன்சர்' வெளியிட வேண்டும். இல்லையென்றால், அத்தகைய வினாக்களை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement