நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு சென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் – ஆசிரியைகள் திரண்டு வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2–வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தி சரி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் உரிய பேச்சுவார்த்தை மூலம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,"ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எந்தத் தரப்பினருக்கும் நிறைவோ நிம்மதியோஇல்லை; ஆட்சி என்ற ஒன்று முறையாக நடைபெறுகிறதா என்பதே அனைவருக்கும் சந்தேகமாக உள்ளது.வேறு வழியில்லாமல் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்தி முடித்து விட்ட போதிலும், அரசு இயங்குகிறதா என்றே தெரியவில்லை.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, நல்ல வேளையாக மத்திய அரசின் அமைச்சர், லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய காரணத்தால், அந்தப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை. அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது.அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா?கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளைமேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வரவேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு: ராமதாஸ் கண்டனம் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கின்றனர்.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். ஆனால்,இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.இப்போராட்டங்கள் பயனளிக்காத நிலையில் இன்று வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக பல வாரங்களுக்கு முன்பே ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.மாணவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக முதலமைச்சரோ, கல்வி அமைச்சரோ ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. அதனால் ஆசிரியர்கள் திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.இதனால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இவ்வளவுக்குப் பிறகும் கூட இந்த போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்றஎண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி போராட்டத்தை சிறுமைப்படுத்துவது, பள்ளிகள் வழக்கம் போல இயங்கின என்று பொய்யான தகவல்களை பரப்புவது போன்ற செயல்களில் தான் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. உண்மையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சத்துணவு ஊழியர்கள் பெயரளவில் பள்ளிகளை திறந்து வைத்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்துவதை பெரும் அவமானமாக அரசு கருத வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என்பதால் அவர்களின் போராட்டத்தை பாமக ஆதரிக்கிறது.கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஜாக்டோ அமைப்பினர் சென்னையில் நடத்திய உண்ணாநிலைபோராட்டத்தில் நான் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தேன்.
ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கானபாமக வரைவுத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பாமக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் இவை நிறைவேற்றப்படும் என மீண்டும் உறுதி அளிக்கிறேன்.அதேநேரத்தில், ஆசிரியர்களை குறையில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளைஅழைத்துப் பேசி அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்''என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Comments
நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
ReplyDeleteசென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் – ஆசிரியைகள் திரண்டு வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2–வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தி சரி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் உரிய பேச்சுவார்த்தை மூலம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,"ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எந்தத் தரப்பினருக்கும் நிறைவோ நிம்மதியோஇல்லை; ஆட்சி என்ற ஒன்று முறையாக நடைபெறுகிறதா என்பதே அனைவருக்கும் சந்தேகமாக உள்ளது.வேறு வழியில்லாமல் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்தி முடித்து விட்ட போதிலும், அரசு இயங்குகிறதா என்றே தெரியவில்லை.
ReplyDeleteலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, நல்ல வேளையாக மத்திய அரசின் அமைச்சர், லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய காரணத்தால், அந்தப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை. அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது.அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா?கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளைமேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வரவேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு: ராமதாஸ் கண்டனம்
ReplyDeleteஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கின்றனர்.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். ஆனால்,இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.இப்போராட்டங்கள் பயனளிக்காத நிலையில் இன்று வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக பல வாரங்களுக்கு முன்பே ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.மாணவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக முதலமைச்சரோ, கல்வி அமைச்சரோ ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. அதனால் ஆசிரியர்கள் திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.இதனால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இவ்வளவுக்குப் பிறகும் கூட இந்த போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்றஎண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி போராட்டத்தை சிறுமைப்படுத்துவது, பள்ளிகள் வழக்கம் போல இயங்கின என்று பொய்யான தகவல்களை பரப்புவது போன்ற செயல்களில் தான் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. உண்மையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சத்துணவு ஊழியர்கள் பெயரளவில் பள்ளிகளை திறந்து வைத்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்துவதை பெரும் அவமானமாக அரசு கருத வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என்பதால் அவர்களின் போராட்டத்தை பாமக ஆதரிக்கிறது.கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஜாக்டோ அமைப்பினர் சென்னையில் நடத்திய உண்ணாநிலைபோராட்டத்தில் நான் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தேன்.
ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கானபாமக வரைவுத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பாமக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் இவை நிறைவேற்றப்படும் என மீண்டும் உறுதி அளிக்கிறேன்.அதேநேரத்தில், ஆசிரியர்களை குறையில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளைஅழைத்துப் பேசி அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்''என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை