Ad Code

Responsive Advertisement

இ - சேவை மையங்களில்புதிய சேவை அறிமுகம்

அரசு, இ - சேவை மையங்களில், ஆதார் அட்டையில், மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரியை மாற்றம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், தலைமைச் செயலகம்; 264 தாலுகா அலுவலகங்கள்; சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம்; 15 மண்டல அலுவலகங்கள்; 54 கோட்ட அலுவலகங்கள்; சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் என, 337 இடங்களில், அரசு இ - சேவை மையங்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. 

இம்மையங்களில், பொதுமக்களிடம் இருந்து, 13.28 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4.36 லட்சம் பேருக்கு, பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.தற்போது, 337 சேவை மையங்களிலும், ஆதார் அட்டையை பதிவு செய்யும்போது வழங்கிய, மொபைல் எண், இ - மெயில் முகவரி போன்றவற்றை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது; இதற்கான கட்டணம், 10 ரூபாய்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement