Ad Code

Responsive Advertisement

பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்

பிஎட் மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக உயர்கல்விதுறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின்  கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 672 பிஎட் கல்லூரிகளுக்கான  மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.  வரும் 10ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.


விண்ணப்பத்தை ரூ.300 செலுத்தி பெற்று கொள்ளலாம். எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உரிய சான்றிதழை சமர்ப்பித்து ரூ.175 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரில் மட்டுமே பெற முடியும்,  தபால் மூலம் பெறமுடியாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி “செயலர், பிஎட் மாணவர் சேர்க்கை 2015-2016, விலிங்டன்  சீமாட்டி கல்வியல் ேமம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் இடங்களின் விவரம்: * ைசதாப்பேட்டை கல்வியல் மேம்பாட்டு நிறுவனம்.  * விலிங்டன் சீமாட்டி  கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி. 

இதற்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.பி.இ., - பி.டெக்., படித்தோருக்கும், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement