Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளியில் வழக்கமான முறையில் இருந்து விலகி டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்

புத்தகங்கள், நோட்டுகள், கரும்பலகை என வழக்கமான கற்பித்தல் முறையில் இருந்து விலகி கணிணி, மடிக்கணிணி, இணையம், கைபேசி, டேப்லட் என்று டிஜிட்டல் முறையில் கற்பித்தல் முறையை வகுப்பறையில் புகுத்தி சாதனை படைத்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர்.

அரசு பள்ளிகள் என்றாலே போதிய வசதிகள் இல்லாமல் மோசமான நிலையில்தான் இருக்கும். கற்பிக்கும் திறனும் குறைவாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.அதிலும் ஆங்கிலம் என்றால் அலறி ஓடும் மாணவர்கள் மத்தியில் கணிணி, மடிக்கணிணி, இணையம், கைபேசி, டேப்லட் வழியாக எளிதாக ஆங்கிலப் பாடங்களை கற்கும் ஆர்வத்தை தூண்டி வரு கிறார் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வன்னிவயல் நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் ஏ.பரமசிவம்.

டிஜிட்டல் கற்பித்தல் முறை குறித்து தி இந்துவிடம் அவர் கூறியதாவது:அரசு பள்ளியில் ஆசிரியராவதற்கு முன்னர் இணையதளப் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும், வட மாநிலத்தில் ந‌வோத‌யா ப‌ள்ளி ஆசிரியராகவும் பணிபுரிந்தேன். அந்த அனுபவத்தின் வாயிலாக கணிப்பொறி, கைபேசி, இணையதளம் இவற்றைப் பயன்படுத்தி 6-ம் வகுப்பு மாணவ ர்களுக்கு சோதனை முயற்சியாக ஆங்கிலப் பாடத்திட்டத்தை கற்றுத்தந்தபோது அவர்கள் அதை எளிதில் புரிந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடம் முழுவதையும் டிஜிட்டல் கற்பித்தல் முறைமூலம் பாடங்களை நடத்தி வருகிறேன்.தினமும் மாணவர்களின் பெற்றோர்களது கைப்பேசி எண்களுக்கு ஒரு ஆங்கில வார்த்தையையும், அதன் தமிழ் அர்த்தத்தையும் குறுந்தகவல்களாக அனுப்பி வீட்டுப் பாடங்களை உருவாக்கியபோது பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாணவர்களுக்கு கணினியில் ஆங்கில தட்டச்சு, மென்பொருட்களைப் பயன்படுத்தி டிஜிட்டல்ஓவியங்கள் வரைதல், கூகிள், விக்கிப் பீடியா இணையதளங்களில் தரவுகளைச் சேகரித்தல், கணிணி-கைபேசிகளில் ஆங்கில அகராதிகளைப் பயன்படுத்தவும் பயிற்சி அளிப்பதால் தயக்கமின்றி ஆங்கிலத்தை எளிதாக மாணவர்களால் கற்றுக் கொள்ள முடிகிறது.மாணவர்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதைப் பார்த்து பள்ளியில் மற்ற ஆசிரியர்களும் டிஜிட்டல் மூலம் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement