அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.
இதற்கிடையே மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையை 2012 ஜூலை முதல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு ரத்து செய்தது.இது போல் தமிழக அரசும் இந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும். இதன் மூலம் பலர் பயன்பெறுவர் என, அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை