'மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேனியைச் சேர்ந்தவர் அப்சரா. இவருக்கு, மதிப்பெண் அடிப்படையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவம் படிக்க சீட் ஒதுக்கப்பட்டது.
கடந்த மாதம், 23ம் தேதி கல்விக் கட்டணம் செலுத்தினார்.கடந்த, 3ம் தேதி அப்சரா, கல்லூரிக்கு சென்றார். அப்போது, அப்சராவுக்கு வழங்கிய 'சீட்'டை அரசிடம் 'சரண்டர்' செய்து விட்டதாக, கல்லூரி நிர்வாகம் கூறியது; அதற்கான ஆவணங்களையும் காட்டியது. மாணவி அப்சரா அதிர்ச்சி அடைந்தார்.அவரது சகோதரி, 'ஆன் - லைனில்' தவறுதலாக, 'சரண்டர்' என்ற பட்டனை அழுத்தியதன் மூலம், சீட் பறிபோய் விட்டது. தன் இடத்தை மீண்டும் ஒதுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அப்சரா, மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு:முதன் முதலில், 'ஆன் - லைன்' முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், அதை புரிந்து கொள்வதில், சிரமம் உள்ளது. தவறுதலாக நடந்த விஷயத்துக்காக, மனுதாரரை தண்டிக்கக் கூடாது.கல்விக் கட்டணத்தை, கல்லூரி ஏற்றுக் கொண்டுள்ளது. கல்லூரியில் சேருவதற்காகவும் சென்றுள்ளார். மீண்டும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளுமாறு உத்தரவிட தேவையில்லை. மனுதாரருக்கு, தகுதி உள்ளது; அதில், எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அவர் கல்லூரியில் சேர்க்கப்பட்டதாகக் கருத வேண்டும். அந்த இடத்தை, காலி இடமாகக் கருதக் கூடாது.இவ்வாறு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை